தூத்துக்குடியில் மறைந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் சார்பில் ரூ.25.65 லட்சம் நிதி உதவியை எஸ்பி ஆல்பர்ட் ஜான் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் முகமது மைதீன் என்பவர் கடந்த 23.04.2025 அன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவரது குடும்பத்திற்கு உதவும் வகையில் கருணையுள்ளத்தோடு அவருடன் 2011ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தமிழ்நாடு முழுவதுமுள்ள சக காவலர்கள் ஒன்று திரண்டு ரூ.25,63,000 பணம் நன்கொடையாக பெற்றனர்.
அவற்றை நிரந்தர வைப்பு நிதி, காப்பீடு பத்திரங்கள் மற்றும் ரொக்கப் பணமாக இன்று (27.11.2025) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து 2011ம் ஆண்டு காவலர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் முகமது மைதீன் குடும்பத்தினருக்கு வழங்கி ஆறுதல் கூறினார்.


