தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆறுமுகம் பொறுப்பேற்றார்.
தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாக மாற்றுத்திறனாளி உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆறுமுகம் என்பவர் இன்று பதவி ஏற்று கொண்டார்.
அதற்கான சான்றிதழை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா வழங்கினார். அதன்பின் மேயர் அவருக்கு சால்வை அணிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர் சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


