விளாத்திகுளத்தில் அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு போட்டி தேர்வு மைய மாணவ, மாணவிகள் இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டு 76 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நாடு முழுவதும் இந்திய அரசியலமைப்பை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக விளாத்திகுளம் தென்காசி ஆகாஷ் அகாடமி சார்பில் இந்திய அரசியலமைப்பு முகவுரை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில் மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பார்க்காமல் மனப்பாடமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து வழக்கறிஞர் ராஜேஷ்வரி இந்திய அரசியலமைப்பின் தோற்றம் அரசியலமைப்பில் உள்ள முக்கிய சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள் பற்றி சிறப்புரையாற்றினார்.


