பொட்டலூரணியில் கழிவுமீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டத்தின் 562ஆவது நாள் பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றியுள்ள மீன் கழிவு ஆலைகளால் காற்று, நிலத்தடி நீர் மற்றும் விவசாய நிலங்கள் மாசுபடுவதாகவும், இந்த ஆலைகளை மூட வலியுறுத்தி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொட்டலூரணி கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டத்தின் 562 ஆவது நாளான நேற்று தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வாக நடத்தப்பட்டது. இதில் பொட்டலூரணி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


