தூத்துக்குடியில் இல்லாத குடிநீர் இணைப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.25 ஆயிரம் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட முத்தையாபுரம் தங்கமணி நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் பகவதிநாதன். இவருடைய இரண்டு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு ஒன்றுதான் உள்ளது. ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 6 ஆண்டு காலத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் குடிநீர் இணைப்பு தொகை வழங்க வேண்டும் என்று கூறி குடிநீர் இணைப்பை துண்டிக்க சென்றுள்ளனர்.
அப்போது வீட்டின் உரிமையாளர் பகவதிநாதன் குடிநீர் இணைப்பு ஒன்று தான் உள்ளது நீங்கள் இரண்டுக்கு குடிநீர் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறீர்கள் நான் பயன்படுத்தும் குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தி விட்டேன் இல்லாத குடிநீர் இணைப்புக்கு 25000 ரூபாய் செலுத்த முடியாது என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில், இன்று தெற்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மேயரிடம் பாதிக்கப்பட்ட பகவதிநாதன், எனக்கு ஒரு குடிநீர் இணைப்பு தான் வீட்டில் உள்ளது 2 குடிநீர் இணைப்பு உள்ளதாக கூறி மாநகராட்சி வாழ்வு ஆபரேட்டர் வீட்டுக்கு வந்து பணம் செலுத்த வேண்டும் 25,000 செலுத்த வேண்டும் என்று கூறுகிறார் என்று மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, உடனடியாக உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு உங்கள் மனு மீது விரைவில் தீர்வு காணப்படும் என்று கூறினார்.


