செய்துங்கநல்லூர் அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர் பயிற்சி வகுப்பு நான்காவது பயிலரங்க கூட்டம் நடந்தது. திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜெய்தூன் பீவி முன்னிலை வகித்தார். ஆசிரியர் சசிகுமார் வரவேற்றார். பயிற்சியாளராக அண்டார்டிகா ஆய்வாளர் இளங்கோ, எழுத்தாளர் கே.ஆர்.பி. மணிமொழிசெல்வன், பேச்சள் இரா. தாழைமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியை டேமி அருள்டா£, வழக்கறிஞர் ஹரிதாஸ், கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை பானுமதி நன்றி கூறினார்.


