தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 143.50 மிமீ மழை பெய்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், தற்போது மழை அளவு குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 143.50 மிமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டனத்தில் 38 மிமீ மழை பெய்துள்ளது.
மேலும், தூத்துக்குடி 1, ஸ்ரீவைகுண்டம் 14.70, திருச்செந்தூர் 21, குலசேகரன்பட்டினம் 27, சாத்தான்குளம் 13.80, எட்டயபுரம் 3, வைப்பார் 4, சூரங்குடி 13, வேடநத்தம் 6, கீழஅரசரடி 2, என மொத்தம் 143.50 மிமீ மழை பெய்துள்ளது.


