தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் தண்ணீரை வெளியேற்றும் பணிகளை அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை கனமழையால் அய்யர்விளை குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்குள்ள பம்ப் ரூம் பகுதியில் ஏற்பட்டிருந்த அடைப்புகளை நீக்கி சீர் செய்யும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி அப்பகுதி மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தாா்.
முன்னதாக தூத்துக்குடியில் மீன்வளக் கல்லூரி அருகே உள்ள மழை நீர் வடிகால் கால்வாயை பார்வையிட்டார். தூத்துக்குடியில் கனமழை பெய்து வருவதை முன்னிட்டு 16வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ் நகர் 6வது தெரு, P&T காலனி 16வது தெரு ஆகிய பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, வ.உ.சி. துறைமுக ஆணையத்தின் தீயணைப்பு வாகனத்தை வரவழைத்து வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலா் ஜெயசீலி, மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர் முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட் ஆகியோர் உடன் இருந்தனர்.


