செய்துங்கநல்லூர்அருகில் உள்ள நாட்டார்குளம் ஜோஸ் மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் தொடர பயிற்சி வகுப்பு பயிலரங்கம் நடந்தது. திருக்குறள் கண்காணிப்புக்குழு உறுப்பினர் மற்றும் பயிலரங்க குழுத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு தலைமை வகித்தார். எழுத்தாளர் மாரிமுத்து வரவேற்றார். பயிற்சியாளராக முனைவர் கந்தசுப்பு, பேச்சாளர்கள் கோபாலகிருஷ்ணன், அஸ்வரனிஹா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பதிலளித்த ராஜேஷ், ஸ்ரீநித்திஸ்,ஐசக், ராகசுபா, வேலரசி, பூர்ணசிவானி ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியைகள் மகாலட்சுமி, தனலெட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை டெமி அருள்டா நன்றி கூறினார்.


