தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.நேற்றும் இன்றும் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.நேற்று மதியத்திற்கு மேல் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.இதற்கிடையில் இன்று காலையில் திருச்செந்தூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான குமாரபுரம், காயல்பட்டினம், வீரபாண்டி பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.


