தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டப் பகுதிகளான குமாரபுரம், காயல்பட்டினம், வீரபாண்டி பட்டினம், ஆறுமுகநேரி, ஆத்தூர் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.
திருச்செந்தூரில் அதிகாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து, சாரல் மழை மெதுவாக கனமழையாக மாறியது.
மேலும் வேகமாக மழை பெய்து வருவதால் முக்கிய சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
பொதுமக்கள்சாலையோரம் குடை பிடித்தபடி சென்று வருகின்றனர்.
மழை சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல் தொடர்ந்ததால், திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் பூமி குளிர்ந்து, ஒரு இதமான சூழல் நிலவி வருகிறது.


