தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் குட்டை போல் தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகரக் குழு செயலாளர் எம்.எஸ்.முத்து வெளியிட்டுள்ள அறிக்கை; தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக் கனக்கில் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். மாவட்ட தலைநகரில் உள்ளதால் அரசு மருத்துவ மனைக்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். நோயாளிகளை கவனித்துக்கொள்ள குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களும் வருகின்றனர். இவ்வாறு அரசு மருத்துவ மனைக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
அரசு மருத்துவ மனைகளை சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துரை அமைச்சர் அறிவுத்தியுள்ளார். அப்படி இருக்க தூத்துக்குடி மருத்துவ கல்லூரி அரசு மனைக்கு வரும் நோயாளிகளும் உறவினர்களும் வேறு ஒரு நோயோடு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அதாவது அரசு மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை கழிவு நீர் தொட்டி நிரம்பியும் உடைந்தும் சாக்கடை நீர் வெளியேறி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே மருத்துவ மனை நிர்வாகம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு சாக்கடை நீரை மருத்துவமனை வளாகத்தில் குட்டை போல் தேங்காமலும் நிரந்தர தீர்வு காணுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.


