கொம்மடிக்கோட்டை அருள்மிகு ஸ்ரீ வாலைகுருசுவாமி கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரர், ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பாலாசேத்திரம் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் வருடந்தோறும் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
முன்னதாக கோயில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் பூஜைகள் நடத்தினர். மாலை 3 மணி அளவில் சந்திரசேகர சவாமி, அம்பாளுடன் எழுந்தருளினார். பின்னர் மாலை 4 மணி அளவில் முக்கனிகள் சர்க்கரை, வெல்லம். பருப்பு, இனிப்புகள் அரிசி மஞ்சள் வளையல்கள் ஆகிய பொருட்கள் சீர்வரிசைகளாக வைக்கப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து சுவாமி, அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்று மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனர். இந்நிகழ்ச்சியில்பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


