தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்பி கே.மகேஸ்வரி உட்பட தமிழகத்தில் 5 காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- சென்னை குற்ற ஆவண காப்பகப் பிரிவு ஐஜி வி.விஜயஸ்ரீ, சென்னை ஊர்க்காவல் படை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தொழில்நுட்பப் பிரிவு ஐஜி அவினாஷ் குமாருக்கு, குற்ற ஆவண காப்பக ஐஜி பொறுப்பு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- சென்னை சட்டம், ஒழுங்கு உதவி ஐஜி ஜே.முத்தரசி, சென்னை செய்தி மக்கள் தொடர்பு எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி எஸ்.பி, கே.மகேஸ்வரி, சென்னை காவலர் பயிற்சிக் கல்லூரி எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
இந்த மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் உள்துறை துறை அறிவித்துள்ளது.


