கோவில்பட்டியில் சாலையை கடக்க முயன்றபோது சரக்கு வாகனம் மோதியதில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சங்கர் (75), இவர் இன்று காலை எட்டையாபுரம் ரோடு தொழிற்பேட்டை அருகே சாலையை கடந்து செல்ல முயன்றபோது சிவகாசியில் இருந்து தூத்துக்குடிக்கு சமையல் எண்ணெய் லோடு ஏற்றிவந்த சரக்கு வாகனம் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலைமீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பிரகாஷ் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


