தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையோன கலை மற்றும் அறிவுதிறன் போட்டிகள் நடைபெற்றது.
தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுபோட்டி, கோலபோட்டி, வினாடிவினா, நெருப்பின்றி சமையல், நாட்டுபுற நடன போட்டி நடைப்பெற்றது. இதில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற புனிதவளனார் மேல்நிலைப்பள்ளி கீழமுடிமண் பள்ளி சுழற்கோப்பை பெற்றது. கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுதன்கீலர், சுதாசுதன், மரு.மகிழ் ஜான், கீர்த்தனாமகிழ் பரிசுகள் வழங்கினர்.


