தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் இந்தியா வாசிக்கிறது இயக்கத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கான வாசித்தல் திறனை மேம்படுத்தும் போட்டிகள் நடைபெற்றது.
இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்பு (ELTAI) பள்ளி மற்றும் கல்லூரி மாணவரிடையே வாசிப்பை ஊக்குவிக்கவும், வளர்க்கவும் இந்தியா வாசிக்கிறது (India Reads) என்றவொரு இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன்படி இன்று அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில், வாசிப்பை முன்வைத்து கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், விரைவாக வாசித்தல், புத்தகத்தைப் பற்றிப் பேசுதல், செய்தி வாசிப்பாளர் போல் வாசித்தல், வினாடி-வினா செய்தியைக் கதையாக மாற்றுதல், கதையை மாற்றிச் சித்தரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதிக புள்ளிகளைப் பெற்று மீன் வளக்கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், தூய மரியன்னைக் கல்லூரி இரண்டாமிடத்தை பெற்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் அ.ஜாய்சிலின் சர்மிளா வரவேற்புரை ஆற்றினார். திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக்குலேசன் மேனிலைப் பள்ளியின் முதல்வர் ஆர். செல்வ வைஷ்ணவி நிறைவுவிழா உரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கினார்.
விழாவின் நிறைவாக அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியின் துணை முதல்வர் இரா.சூர்யகலா நன்றியுரை ஆற்றினார். இப்போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி செயலர் ச.முரளிதரன் கல்லூரி அகில இந்திய ஆங்கிலக்கழகத்தின் தூத்துக்குடி ஒருங்கிணைப்பாளாரும், கல்லூரியின் முதல்வரான அ.ஜாய்சிலின் சர்மிளா செய்திருந்தார்.


