தூத்துக்குடியில் 125 ஏக்கர் சி.வ.குளத்தில் முள்செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி சி.வ.குளத்தை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்: 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட கடும் வெள்ளத்தை ஒரு பாடமாக ஏற்றுக்கொண்டு வரும் காலத்தில் எவ்வளவு பெரிய காட்டாற்று வெள்ளம் வந்தாலும் மாநகர் மக்கள் பாதிக்காத வகையில் 125 ஏக்கர் கொண்ட சி.வ.குளம் முள் செடிகள் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டு காட்டாற்று வெள்ள நீர் தேக்கி வைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி காலங்களில் நீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், பறவைகள் வந்து நீர் அருந்தவும், உணவு தேடவும் உதவும். மேலும் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும். மாநகராட்சி பகுதி மக்கள் எவ்வித தயக்கமுமின்றி மழை காலத்தை எதிர்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்.
நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், மாநகராட்சி பொறியாளர் தமிழ்செல்வன், சுகாதார ஆய்வாளர் ராஜசேகர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி ஜேஸ்பர், வட்டச்செயலாளர்கள் ராஜன், பிரசாந்த் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


