தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் புதூர் ஊராட்சி ஒன்றியம் மேலக்கரந்தை கிராம ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாடு முழுவதும் செப்டம்பர் 17ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவையை வலியுறுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்தல், கிராமப்புறங்களை சுத்தமாக வைத்திருத்தல்,சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது.
மேலக்கரந்தை ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பிளாஸ்டிக் பொருட்களுக்கு குட் பை ,மீண்டும் மஞ்சப்பையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி பொதுமக்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.இதில் தூய்மை பாரத இயக்க வட்டார ஒருங்கிணைப்பாளர் கண்ணன்,ஊராட்சி செயலர் ஆறுமுகம்,சுகாதார உறுப்பினர் பவித்ரா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


