உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினால் ஏற்படும் வேலை பளுவை தவிர்க்க வலியுறுத்தி முகாமில் வருவாய்த் துறையினர் திடீர் போராட்டம் நடத்தினர்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினால் வருவாய்த் துறை ஊழியர்களுக்கு ஏற்படும் வேலை பளுவை தவிர்க்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு வருவாய் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பிற்பகல் 3 மணியிலிருந்து பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் செல்வகுமார், வட்டத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


