சாத்தூர் ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிலப்பதிகாரம் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கோவில்பட்டி அருகே அமைந்த சாத்தூர் வட்டம், ந. சுப்பையாபுரம், அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, மதுரை தமிழ்ச் சங்க நிர்வாகியும், யாதவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஈ.கி. இராமசாமி, மதுரை தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் இருளப்பன், சிவகாசி, அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் சிங்கராஜ், கோவில்பட்டி மகிழ்வோர் மன்ற இயக்குநர், நாடார் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேசன், மற்றும் ஊடகவியலாளர்கள் சுரேஷ்குமார், தினகரன் வருகை புரிந்தனர்.
இப்பள்ளியில் சிலப்பதிகாரம் முழுமையும் முற்றோதல் செய்த மாணவியர்கள் வேணி, வீரச் செல்வி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்தினர். சிலப்பதிகாரக் காதைகளைக் கேட்டு மாணவச் செல்வங்கள் தெளிவாகக் கூறியதைக் கண்டு வியந்தனர். நூல் பரிசும் பணப் பரிசும் அளித்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனியப்பன் தலைமை வகித்தார்.
தமிழின் மேன்மையையும் தற்காலத்தில் குழந்தைகளின் மனனத்திறன் குறைந்துள்ளது. அதை மேம்படுத்த, மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பு விருந்தினர்கள் எடுத்துரைத்தனர். அடிகள் அருளிய 5270 அடிகளையும் வண்ணத் தமிழால் சிறப்பு செய்த சிலம்புச் செல்வங்களால் இந்நிகழ்வு சிறப்பு பெற்றது. நிறைவாக தமிழ் ஆசிரியர் இராஜசேகர் நன்றி தெரிவித்தார்.


