முக்காணி தாமிரபரணி ஆற்றில் மிதந்துவந்த பெண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பிள்ளையார் நகர் அருகே தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள படித்துறை அருகே நேற்று பெண் சடலம் மிதந்து வந்தது. அப்பெண்ணுக்கு சுமார் 50 வயதிருக்கும். முக்காணி கிராம நிர்வாக அலுவலர் முத்து அளித்த புகாரின்பேரில், ஆத்தூர் உதவி ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குப் பதிந்தார். அந்தப் பெண் யார், எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து ஆய்வாளர் பிரபாகரன் விசாரித்து வருகிறார்.


