ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குமாஸ்தாவின் லைசென்ஸை நிரந்தரமாக ரத்து செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த குமாஸ்தா பொன்னுசாமி என்பவரை வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்கத்திற்கு எதிரான ஒழுங்கீனமான நடத்தைகளுக்காக தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்து குமாஸ்தா லைசென்ஸை ரத்து செய்துள்ளார்.
மேலும், மாநில கொமஸ்தா சங்கம் ஸ்ரீவைகுண்டம் கொமஸ்தா சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது. எனவே வழக்கறிஞர்கள், பொதுமக்கள் யாரும் ஸ்ரீவைகுண்டத்தில் நீதித்துறைக்கு எதிராக touts ஆக செயல்படும் அங்கீகரிக்கப்படாத நபர்கள் (போலி குமாஸ்தாக்கள்) யாரையும் தொடர்பு கொள்ளவேண்டாம் என வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது.


