சாத்தூரில் ஜ.என்.டி.சி. மக்கள் மன்றம் சார்பாக, “காய்கறி மருத்துவம்” என்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது.
இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் வெகு மக்கள் பிரிவான ஜ. என்.டி.சி. மக்கள் மன்றம் சார்பாக, “காய்கறி மருத்துவம்” என்ற தலைப்பில் சாத்தூர் ஜ.என்.டி.சி. அலுவலக கூட்ட அரங்கில் “விழிப்புணர்வு கருத்தரங்கம்” நடைபெற்றது. இந்தியன் நேச்சுரல் தெரபி கவுன்சில் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஆவுடேஸ்வரி துவக்கவுரை ஆற்றினார்.
கோ.சுரேஷ் குமார் மேனாள் வேளாண்மை அறிவியல் ஆசிரியர், இயற்கை உணவு ஆர்வலர் (கோவில்பட்டி) கலந்து கொண்டு மனித உடல் ஆரோக்கியத்தில் காய்கறிகள், கீரைகள், கனிகள் ஆகியவற்றின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். சேர்மன் வெங்கடாசலம், அவருக்கு சால்வை அணிவித்து, நூல் பரிசளித்து, நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மகாவிஷ்ணு, லேகதாரா, தீபா உள்ளிட்ட மாற்று மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்


