மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் சாரண, சாரணியர் இயக்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரம் அருகே உள்ள நங்கைமொழி ஜெய் இன்டர்நேஷனல் பள்ளியில் சாரணர் இயக்க சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி முதல்வர் சிவ அபிநயா தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட சாரணர் இயக்க செயலாளர் சாமுவேல் சத்தியசீலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
சாரணியரியக்கத்தின் மூத்த பொறுப்பாசிரியைகள் காந்திமதி மற்றும் வளர்மதி ஆகியோர் சரணியர் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். நிறைவாக திருச்செந்தூர் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் துணைச் செயலாளர் ஜெர்சோம் ஜெபராஜ் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சாரணர் இயக்க பொறுப்பாசிரியர் ஸ்டீபன் பிரேம்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சிவ அபிநயா தலைமையில் மக்கள் தொடர்பு அதிகாரி கோகிலா மற்றும் சாரண, சாரணியர்கள் செய்திருந்தனர்.


