ஸ்ரீவைகுண்டம் அருகே கோவில் நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசாார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வடக்கு தோழப்பன் பண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புக்குட்டி மகன் தர்மர் (55), இவர் அங்குள்ள கோவில் நிர்வாகியாக உள்ளார். நேற்று அந்த கோவிலில் கொடை விழா நடந்துள்ளது. அதில், பத்மநாபமங்களம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரசுப்பு மகன் ஆந்தியா (25) என்பவர் மதுபோதையில் தகராறு செய்தாராம். இதனால் தர்மர் அவரை கண்டித்துள்ளார்.
இந்நிலையில், நள்ளிரவு கொடைவிழா முடிந்த பின்னர் வந்து கொண்டிருந்த தர்மரை ஆந்தியா அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல்அறிந்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து ஆந்தியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


