தூத்துக்குடி தாளமுத்துநகர் ராஜபாளையம் புனித பிலோமினம்மாள் ஆலய 67ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவின் முதல் நாள் மாலை திருப்பலிக்கு அருட்தந்தை டோமினிக் அருள்வளவன் மறை மாவட்ட முதன்மை குரு சிப்பிக்குளம் தலைமையில் அருட்தந்தை குழந்தை ராஜ் சவேரியார்புரம் பங்கு தந்தை மறைவு உரையாற்றினார். தாளமுத்து நகர் பங்குத்தந்தை பிரான்சிஸ்வசந்தன் திருப்பலிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்
திருவிழாவில் தினமும் மாலை ஜெபமாலை நடைபெறும். தொடர்ந்து நவநாள் திருப்பலி நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒன்பதாம் திருவிழா 6.9.2025 சனிக்கிழமை இரவு 9 மணிக்கு தேர் பவனி நடைபெறும். பத்தாம் திருவிழா 79.2025 ஞாயிற்றுக்கிழமை திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி, மாலை நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள், இறை மக்கள், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.


