தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் ரூபா, மற்றும் கல்லூரியின் மேன்மையாளர் பாத்திமா லூயிஸ், துணை முதல்வர் எஸ்எம்டி மதுரவல்லி ஆகியோர் தலைமை வகித்தனர. மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இப்போட்டியானது பெல் ஹோட்டலில் இருந்து முத்து நகர் விலக்கு வரை நடைபெற்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற துறையினர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற முதல் 50 பேருக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி பொன்விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் பிரிவினருக்கும் ஆண்கள் பிரிவினருக்கும் தனித்தனியாக முதல் பரிசாக 1500 இரண்டாம் பரிசாக 1000 மூன்றாம் பரிசாக 500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் உணவுகளும் வழங்கப்பட்டன.


