தூத்துக்குடியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழா 6ஆம் நாள் நிகழ்வில் அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடியில் “தொடர்ந்து படி. தூத்துக்குடி” எனும் தலைப்பிலான “புத்தகத் திருவிழா” தருவை மைதானத்தில் கடந்த 22ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினந்தோறும் பல்வேறு பள்ளி கல்லூரி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள் என நடைபெற்று வரும் நிலையில் புத்தகத் திருவிழாவின் ஆறாவது நாளான நேற்று மாலை “சமகாலத்தில் சமூக நீதியின் பரிமாணங்கள்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கில் “மொழியிலும் சமூக நீதி. கலையிலும் சமூக நீதி” எனும் தலைப்பில் சுகுணா திவாகர், “நெடிலும் குறிலும், பேசப்பட வேண்டிய சமூக நீதி” எனும் தலைப்பில் மதிவதனி, “திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதிப் பயணம்” எனும் தலைப்பில் தமிழன் பிரசன்னா, “சமூகநீதியின் தோற்றமும், உள்ளடக்கமும்” எனும் தலைப்பில் மதுர் சத்தியா ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கில் உரை நிகழ்த்திய அவர்களுக்கு ஆறாவது புத்தகத் திருவிழாவின் நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாநகராட்சி தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், மாவட்ட பிரதிநிதி சேர்ம பாண்டியன், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், விஜயகுமார், நாகேஸ்வரி, வட்டச் செயலாளர்கள் கருப்பசாமி, டென்சிங், செல்வராஜ், மரிய ஹான்ஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் அந்தோணி கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி மகளிர் அணி கமலி மற்றும் பள்ளி மாணவியர், ஆசிரியர் பெருமக்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.


