தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது யாருக்கும், எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அரசு நிறைவேற்றும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று காலை நடந்தது. ஆணையர் பானோத் ம்ருந்கேந்தர்லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உள்ளாட்சிகளில் பணிபுரியும் அலுவலர்கள் உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்கள் புத்தாக்க பயிற்சி அளிக்கும் இயக்குநர் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனத்திற்கு ஓவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளும் வருடாந்திர பங்களிப்பு தொகை 300 லட்சம் செலுத்த மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசானை ஆணையிட்டுள்ளது.
அதற்கு 300 லட்சம் ஓதுக்கீடு செய்வது மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பொதுநிதித் திட்டம் 2025-26ன்கீழ் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பூங்காக்களில் உள்ள பழுதான மின்விளக்குகளை சரிசெய்து மாற்றி அமைக்கும் பணிக்கு ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டு அதற்கு அனுமதி வழங்குவது, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 21.83 கிலோ மீட்டர் தூரத்தில் புதிதாக 253 சாலைகள் அமைக்கும் பணிக்கு 25, 26ல் சிறப்பு நிதி 14.70 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கி அரசு முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும் துறை ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பணிகள் மேற்கொள்வது மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை பணிகளின் கீழ் குப்பைகள் மற்றும் மக்கும் குப்பை மறுசூழற்சி குப்பை எனத்தனித்தனியாக பிரித்து ஓப்படைக்கும் பணியினை ஜிஎஸ்டி நீங்கலாக பல நிறுவனங்களுக்கு மேற்கண்ட பணிகளை ஓப்பந்த உடன்படிக்கை படி முதல் ஆண்டு டிம்பிங் கட்டணத்தில் ஓவ்வொரு ஆண்டு 10 சதவீதம் உயர்த்திட ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்பட 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கப்பல்கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு
பின்னர் அதிமுக எதிர்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூர்த்தி பேசுகையில் முள்ளக்காடு பகுதியில் பல ஏக்கர் உப்பளங்களை கையப்படுத்தி கப்பல் கட்டும் தளம் அமைப்பதின்மூலம் பல்வேறு தரப்பினர்; தனது உரிமைகளையும் சொத்துக்களையும் இழக்க நேரிடும் வேலை வாய்ப்பும்இல்லாத நிலை உருவாகும் அதை நிறுத்த வேண்டும். தனியாருக்கு குப்பை அள்ளுவதற்கு ஓப்பந்தம் வழங்குவதன் மூலம் பல்வேறு குறைபாடுகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. அதையும் தடுக்க வேண்டும் புதிய பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள மாநகராட்சி சைக்கிள் ஸ்டாண்ட் குத்தகைக்கு விடப்பட்டதையும் முறைகேடுகள் தடுப்பதற்கும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேசினார்.
மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் கப்பல்கட்டும் தளம் அமைப்பது தொடர்பாக 17 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பணியாகும் அந்த திட்டம் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளும் போது யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அத்திட்டத்தை அரசு நிறைவேற்றும். தனியார் வசம் குப்பை அள்ளும் பொறுப்பை ஓப்படைத்து விட்டதால் எந்த குறைபாடுகள் இல்லாமல் அந்த நிர்வாகம் பார்த்துக்கொள்ளும். இதில் கவலை கொள்ள அவசியமில்லை புதிய பேருந்து நிலைய சைக்கிள் ஸ்டாண்ட் ஓப்பந்தத்தில் குறைபாடுகள் விதிமுறை மீறல்கள் இருப்பதாக புகார் வந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் மக்களுக்கான திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பணியாற்றி வருகிறது. இதற்கு அனைவரும் ஓத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
திமுக கவுன்சிலர்கள் சரவணக்குமார், மெட்டில்டா, நாகேஸ்வரி, ராமகிருஷ்ணன், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், தங்களது பகுதியில் நிறைவேற்றிய பணிகளை சுட்டிக்காட்டியும் நிறைவேற்ற வேண்டிய சாலை கால்வாய் பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை சுட்டிக்காட்டி அதிமுக கவுன்சிலர் பத்மாவதி கோரிக்கை மனு வழங்கி பின் மேயர் பேசுகையில் குடிதண்ணீர் தட்டுபாடின்றி வழங்கப்பட்டு வருகிறது. சில பணிகள் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்படுகிறது. எதிர்கால தலைமுறையினர் நலன் கருதி சுகாதாரம் ஆரோக்கியம் உள்ளிட்ட பல பணிகளை கருத்தில் கொண்டு பணியாற்றி வருகிறோம். பாதாள சாக்கடை உள்பட நிறைவேற்றபட வேண்டிய அனைத்து பணிகளும் முறைப்படுத்தி எல்லா வார்டுக்கும் நிறைவேற்றி தரப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் உதவி பொறியாளர் சரவணன், நகரஅமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர்அகமது, நகர்நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ஸ்டாலின் பாக்கியநாதன், நெடுமாறன், ராஜசேகர், மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், ரெங்கசாமி, ராஜதுரை, விஜயகுமார், பட்சிராஜ், ஜான், வைதேகி, சுப்புலட்சுமி, ஜெயசீலி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, சரண்யா, சோமசுந்தரி, எடின்டா, முத்துமாரி, தனலட்சுமி, உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அனைவருடைய சார்பிலும் பணி உயர்வு பெற்று சென்னை செல்லும் ஆணையருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். மாநகராட்சி கூட்டத்தில் 50 சதவீதம் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்று தீர்மானம் விவாதங்கள் எல்லாம் முடிந்தபின் வருகை தந்ததால் மக்கள் பிரதிநிதிகள் எல்லா நன்மைகளை பெற்றுக்கொண்டு பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக பல சமூகஆர்வலர்கள் குற்றம் சுமத்தினார்கள்.


