கோவில்பட்டியில் டூவீலர் ஒர்க்ஷாப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வாகனங்கள் எரிந்து சேதமானது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பார்க் ரோடு எதிரே உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் கதிர்வேல் நகரைச் சேர்ந்த மாரிராஜ் என்பவர் டூவிலர் ஒர்க் ஷாப் வைத்துள்ளார். இந்த நிலையில் ஒர்க்ஷாப் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும், 2 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் எனத் தெரிகிறது. இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


