தருவைகுளம் பகுதியில் திரியும் குரங்குகளைப் பிடித்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என்று வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியில் சமீபகாலமாக 3 குரங்குகள் சுற்றித் திரிகின்றன. குழந்தைகள் பயிலும் பள்ளியின் முன்பாகவும், மரத்தின் மீதும், வகுப்பறைக்குள்ளும், மொட்டை மாடி வழியாக வீடுகளிலும் புகுந்தும் தொல்லை கொடுத்து வருகிறது. சிறுவர்கள், பெண்களை பயமுறுத்தியும், கையில் உள்ள பொருள்களை பிடுங்கிக் கொள்வதுமாக உள்ளது. மேற்படி இந்தக் குரங்குகளைப் பிடித்து வனப் பகுதிக்குள் விடுமாறு பொதுமக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


