தூத்துக்குடியில் வாட்ச்மேனை கட்டையால் அடித்து கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே உள்ள பொட்டல்காடு மேலத் தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் சந்திரன் (55). இவர், கிழக்கு கடற்கரை சாலையில் வெள்ளப்பட்டி அருகே பாலம் அமைக்கும் பணியில் வாட்ச்மேனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று இரவு வெள்ளப்பட்டி பாலத்தின் கீழ் பகுதியில் அவர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரம் அடைந்த அவரது நண்பர்கள் அவரை கம்பால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து தருவைகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து அவரை கொலை செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


