தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் மூட்டா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ திரும்பப் பெறுதல், உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்குதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (மூட்டா) சார்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மூட்டா கிளைத் தலைவர் பேராசிரியை சுபா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மூட்டா மத்திய இணை பொதுச் செயலர் சிவஞானம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். முன்னதாக, மூட்டா கிளைச் செயலர் மீனாட்சி சுந்தரம் வரவேற்றார். கிளை பொருளாளர் கண்ணன் நன்றி கூறினார்.


