தூத்துக்குடி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டிகள் தொடங்கின.
தூத்துக்குடி லசால் பள்ளி, பள்ளி கல்வித் துறை ஆகியன சார்பில், மாவட்ட அளவிலான மாணவர், மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகள், 14, 17, 19 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டன. இதில், ஆண்கள் பிரிவில் 27 அணியினரும், பெண்கள் பிரிவில் 27 அணியினரும் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும்.
மாவட்ட விளையாட்டு அரங்கில் தொடங்கிய இந்த போட்டியை, தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிர்ஷ்டராஜ், மாவட்ட கால்பந்து கழக செயலர் லூர்து பீரீஸ், லசால் பள்ளித் தாளாளர் பிரெடி ஆகியோர் தொடங்கிவைத்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை, கால்பந்து பயிற்சியாளர் தர்மர், உடற்கல்வி ஆசிரியர் ஜெயக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


