சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவுதினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகம் கலைஞர் அரங்கில் வைத்து ஒண்டிவீரன் திருவுருவப் படத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், மண்டல தலைவர் பாலகுருசாமி ஆகியோர் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் இலக்கிய அணி சரத் பாலா, மகளிரணி கவிதா தேவி, வழக்கறிஞர் அணி குபேர் இளம்பருதி, சிறுபான்மை அணி பொன் சீலன், மாவட்ட அணி தலைவர்கள் மருத்துவர் அணி அருண்குமார், பொறியாளர் அணி பழனி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், நாகராஜ், மாநகர அணி அமைப்பாளர் இலக்கிய அணி ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி அருண் சுந்தர், அயலக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், மகளிரணி ஜெயக்கனி, ஐடி விங் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.


