தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் டி.ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ், பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், எஸ்சி – எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், மகிளா காங்கிரஸ் தனலட்சுமி, இசக்கியம்மாள், மாநில பேச்சாளர் பார்த்திபன், ஓர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட பொதுச் செயலாளர் சம்சுதீன், சேகர், ஐஎன்டியூசி மனோகர், சுரேஷ்குமார், சுந்தர்ராஜ், வழக்கறிஞர் செல்வம், முருகேசன், ஜான் வெஸ்லி, அசனார், சேக்ஸ்பியர், தாசன், பாலகிருஷ்ணன், பிரைன்நாத் விவசாய பிரிவு பேரையா, வாசிராஜன்,ஆனந்தராஜ், தர்மராஜ், ஐஎன்டியூசி முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர், பாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


