ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி சார்பில் தூத்துக்குடி எஸ்ஏவி ஆரம்பப் பள்ளியில் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் (இன்சார்ஜ்) முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். விழாவில் ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி தலைவர் ரோ. ஜே. விக்டர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார். “வாழ்க்கை வெற்றி அல்லது தோல்வி தருவதில்லை; அது வாய்ப்புகளை அளிக்கிறது. அவற்றைப் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்” எனத் தலைவர் வலியுறுத்தினார்.
முன்னாள் தலைவர்விக்னேஷ் வீரபாகு “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். முன்னாள் உதவி ஆளுநர் ரோ. எம். பாலமுருகன் “ரோட்டரியின் போலியோ ஒழிப்பு பணிகள்” குறித்துப் பேசினார்.
விழாவில் ரோட்டரி கிளப் பேர்ல்சிட்டி செயலாளர் ரோ. எஸ். கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் ரோ. தெய்வசிகாமணி, முன்னாள் தலைவர்கள் ரோ. முகமது இப்ராஹிம், ரோ. எஸ்.எம். மூர்த்தி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி ஆசிரியர்கள் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சி நிறைவாக, மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி சங்க உறுப்பினர்களால் வழங்கப்பட்டது.


