கோவில்பட்டி ஆசியாபார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடந்த 79வது சுதந்திர தினவிழாவில் பணியாளர்கள் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவில்பட்டி ஆசியா பார்ம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற 79வது சுதந்திர தினவிழாவில் நிறுவன தலைவர் ஆசியா பார்ம்ஸ் பாபு தலைமை வகித்தார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரவி மாணிக்கம், ஆசியா கேண்டி நிறுவன தலைவர் பத்மா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தினர். ஆசியா பார்ம்ஸ் நிறுவன மேலாளர் மெக்ஸி அனைவரையும் வரவேற்றார்.
ஜீவ அனுக்கிரகா அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் தேசிய கொடி ஏற்றினார். கோவில்பட்டி மருத்துவர்கள் ஆத்மிகா சஞ்சய்,சஞ்சய் சிவநாராயணன், ஆகியோர் லாயல் மில் காலனி பூங்காவில் மரக்கன்று நடுபணியினை துவக்கி வைத்தனர்.
தமிழக வெற்றிக்கழக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சம்பத்குமார் கலந்துகொண்டு சுதந்திர தின உரையாற்றினார். இதில் சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன், இலுப்பையூரனி முன்னாள் வார்டு உறுப்பினர் ராமமூர்த்தி, உள்பட ஆசியா பார்ம்ஸ் ஆசியாகேண்டி நிறுவன பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணியாளர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.


