தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் சார்பில் 79வது ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஐஎன்டியூசி மாநில பொதுச் செயலாளர், காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள் சாமி தேசிய கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி, வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன் தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி ஜெயஜோதி, ஆராய்ச்சி துறை சிவராஜ் மோகன், மாநகரச் செயலாளர் இக்னேஷியஸ்,மீனவர் அணி மிக்கேல் குரூஸ், ரூஸ்வெல்ட், வர்த்தக காங்கிரஸ் நேரு, எஸ்சி எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


