இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது.
வாக்கு திருட்டியில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்த படியும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அறிவித்தபடியும் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது.
பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணியில், காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தேர்தல் ஆணையத்திற்கும், மோடி அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்று ஒன்றாம் கேட் காந்தி சிலை முன்பாக நிறைவடைந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏபிசி வி சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திர போஸ், காங்கிரஸ் எடிசன், சாமுவேல் ஞானதுரை, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல், விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், உள்பட 200க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.


