தருவைகுளத்தில் காவல்துறை சார்பில் உலக போதை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படியும், விளாத்திகுளம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின்படியும், தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியானது தருவைக்குளத்தில் நடைபெற்றது.
இப்பேரணியில் தருவைகுளம் அரசு பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவ மாணவிகளுடன், பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்றோ ரூபன், உதவி தலைமை ஆசிரியர் சுமதி, பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியன், செல்வ பிரதாப், பிரதீபா, மகேஸ்வரி, ஜடாஸ்கர், திருமதி ஐடாஶ்ரீ, உடற்கல்வி ஆசிரியர் அந்தோனி ரவிக்காந்த் மற்றும் தருவைகுளம் காவல்துறையின் தலைமை காவலர், காவலர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.


