தூத்துக்குடியில் குடிநீர் குழாய் உடைந்து பிரதான சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு ராஜாஜி பூங்கா மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதுக்கிராமம் பிரதான சாலையில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த ஒரு வார காலமாக சாலையில் குளம்போல் தேங்கியது.
இதனால் அப்பகுதியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வாங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


