தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள், இளைஞர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில், மாற்றுத்திறனாளிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் விழா மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கனி ரெசிடென்சி பியர்ல் ஹாலில் வைத்து நடைபெற்றது. இதில், சுமார் 200க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


