தூத்துக்குடியில் வட்டத்தெப்பம் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு மத்திய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக பாராட்டு விழா நடந்தது.
தூத்துக்குடியில் வட்டத்தெப்பம் வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக சரவணாதி நைட்கிளப் உரிமையாளர் சரவணமூர்த்தி, செயலாளராக சாம்சங் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் பால், பொருளாளராக சரவணா எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சரவணகுமார் ஆகியோருக்கு மத்திய வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக தலைவர் ஜவஹர் தலைமையில், ஹோட்டல் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் செந்தில் ஆறுமுகம் முன்னிலையில் பாராட்டு விழா நடந்தது.
ஹோட்டல் வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் பாலமுருகன், பழைய பேருந்து நிலைய வட்டார வியாபாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் சுப்பையா, புதிய பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க செயலாளர் செபாஸ்தியான், எம்.சவேரியார்புரம், ஸ்ரீகணேஷ் நகர், ராஜீவ்நகர் பகுதி வியாபாரிகள் நல சங்க தலைவர் வேல் முருகன், வஉசி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், வட்டத்தெப்பம் சங்கத்தின் முன்னாள் தலைவர் பெரியசாமி, பொருளாளர் முருகன், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


