மினி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று பாண்டியபதி பரதவர் நல உரிமைச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் பாண்டியபதி பரதவர் நல உரிமைச் சங்க சங்க பொதுச் செயலாளர் இன்னாசி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது “தமிழக அரசு தூத்துக்குடி மணப்பாடு கன்னியாகுமரி உள்பட 8 இடங்களில் மினி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திமுக அரசு கடந்த நாலரை ஆண்டுகளாக மீனவர்களை வஞ்சித்து வருகிறது.
குலசை ஏவுகனை, உடன்குடி பவர் பிளான்ட் தற்போது மினி துறைமுகம் என மீனவர் சமுதாயத்தை இந்த திராவிட மாடல் அரசு அளித்து வருகிறது. மீன்வளத்துறை அமைச்சராக மாற்று சமுதாயத்தினரை இதுவரை எந்த அரசும் அறிவித்தது கிடையாது. தூத்துக்குடி தொடங்கி பெரியதாழை உவரி வரை கடல் தொழிலை அழித்து வருகிறது. இதுபோல் எந்த அரசும் செய்யாத அளவு தடைகால நிதியை தாமதம் படித்து வருகிறது.
வீடு தேடி ஸ்டாலின் வரும் திட்டம் போல் மீனவர்களை அழைத்து துறைமுகம் அமைப்பது குறித்து கருத்து கேட்டிருக்கலாம். தமிழக அரசை கண்டித்து ஓரிரு வாரங்களில் தூத்துக்குடியிலும் சென்னையிலும் மொத்தம் உள்ள ஒரு கோடியே என்பது லட்சம் மீனவர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்து உள்ளோம் என்று தெரிவித்தார். பேட்டியின் போது துணைத் தலைவர் அந்தோணிசாமி, பரதநல சங்கத் தலைவர் கனகராஜ் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


