தூத்துக்குடியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஒலித்த திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் அவரது திருவுருவ படத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் – வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாநகராட்சி கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டூர் ராஜா உறவினர் சக்தி வித்யாலயா இல்லத் திருமண விழாவில் கனிமொழி கருணாநிதி எம்பி கலந்து கொண்டு மணமக்கள் பிரியங்கா – மாரிஆனந்த் ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்!


