வசவப்பபுரம் காளியம்மன் கோயில் அருகே 150 குடும்பத்தினை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். வசவப்பபுரம் நாலுவழிச்சாலை அருகே இந்த தெரு உள்ளது. கடந்த 15 நாள்களாக இந்த பகுதிக்கு குடிதண்ணீர் வரவில்லை. இதனால் பொதுமக்கள் நாலு வழிச்சாலையை தாண்டி எதிர்புறம் உள்ள குடியிருப்புக்கு சென்றே குடிதண்ணீர் எடுக்க வேண்டியது உள்ளது. இதனால் விபத்தில் சிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றன. இதற்கிடையில் பல முறை அதிகாரிகளிடம் இது குறிதது பேசியும் நடவடிக்கை இல்லை. இதனால் சுமார் 50 க்கு மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை வசவப்பபுரம் நாலு வழிச்சாலையில் மறியல் செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முறப்பநாடு போலிசார் சம்பவ இடத்துக்-கு வந்துஅவர்களிடம் பேச்சு வார்த்தைநடத்தினர். அப்போது அவர்களுக்கு தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். அதன் பின் அந்த மக்கள் கலைந்துசென்றனர். இதனால் வசவப்பபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


