திருச்செந்தூரில் 108 ஓதுவார் மூர்த்திகளுடன் அமர்ந்து திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி பாடல்கள் பாடி அசத்திய பக்தி இளவரசி
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடமுழுக்கு நாளை காலை நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 1ஆம் தேதி இரவில் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி நேற்று வரை 9 கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றுள்ளது. இன்று 10,11 கால யாகசாலை பூஜைகளும் நாளை அதிகாலை 3.30 மணியளவில் 12 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று 6.10 மணியளவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெறுகிறது.
யாகசாலை வேள்வி வழிபாட்டில், தமிழில் வேத பாராயணம், 108 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், தேவாரம், திருவாசகம் கந்தர் அனுபூதி உள்ளிட்ட செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் ஆகியன
நடைபெற்று வருகிறது. இன்று இரவு நடைபெற்ற 9 வது கால யாகசாலை பூஜையில் பக்தி இளவரசி திருப்புகழ் தியா பங்கேற்று
108 ஓதுவார் மூர்த்திகளுடன் இணைந்து
பன்னிரு திருமுறைகள், சண்முகர் சரணம் மனமுருக பாடி அசத்தினார். இதனை கண்டு ரசித்த சிவாச்சாரியார்களும், ஸ்தல அர்ச்சகர்களும்,
பக்தர்களும், பொது மக்களும் சிறுமி திருப்புகழ் தியாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.


