இந்த கும்பாபிஷேக விழாவை காண வரும் பக்தர்கள் எந்தவித நெருக்கடி இன்றி காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் நேரலையில் காண எல் இ டி திரைகள் அதேபோல் தற்காலிக வாகன நிறுத்துமிடம், பேருந்து நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் 65 எல்இடி திரைகள், கழிப்பிடம் குடிநீர் உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. 20 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 25 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. 27 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது.
காவல்துறை சார்பில் 6000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. மூன்று இடங்களில் 1500 பேருந்துகள் நிறுத்தக்கூடிய வகையில் தற்காலிக பேருந்து நிறுத்தும் இடங்கள், 20 இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
824 கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருச்செந்தூருக்கு 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 455 சிறப்பு பேருந்துகள் மொத்தம் 855 சிறப்புகள் இயக்கப்பட உள்ளது.
தற்காலிக பேருந்து, வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் இருந்து கோவிலுக்கு இலவச மினி பேருந்து மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


